/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலை பகுதிகளில் பாதியில் நிற்கும் பிரதமர் குடியிருப்பு திட்டப்பணி
/
மலை பகுதிகளில் பாதியில் நிற்கும் பிரதமர் குடியிருப்பு திட்டப்பணி
மலை பகுதிகளில் பாதியில் நிற்கும் பிரதமர் குடியிருப்பு திட்டப்பணி
மலை பகுதிகளில் பாதியில் நிற்கும் பிரதமர் குடியிருப்பு திட்டப்பணி
ADDED : செப் 01, 2024 03:52 AM
ஈரோடு: அந்தியூர் தாலுகா பர்கூர் பஞ்., சோளகனை உட்பட பல்வேறு பகுதி மலைப்பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
பர்கூர் பஞ்., சோளகனை கிராமத்தில், 2021ல் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில், முன்னுரிமைப்படி பயனாளிகள் தேர்வு செய்து, ௧.70 லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டி கொள்ள ஆணை வழங்கினர். சோளகனை கிராமத்தில் மட்டும், 20க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வீடு கட்டும் பணியை துவங்கினர். இரு தவணை நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி நிறைவு பெற்றது. இறுதி தவணை தொகை ஒதுக்கப்படாமல், 20 வீடுகளின் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது.
மூன்று ஆண்டாக கட்டுமான பணி நிறுத்தப்பட்டு சிரமப்படும் மக்களை கருத்தில் கொண்டு, நிதியை விடுவித்து, வீட்டை முழுமையாக கட்டி முடிக்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.