ADDED : ஆக 30, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த செல்லம்பாளையத்தை சேர்ந்தவர் யுவேந்-திரன், 27; இவருக்கு சொந்தமான கால்நடைகளை பராம-ரிக்கும் பணியில் கடலுாரை சேர்ந்த அஜித், 27, அவரது மனைவி பிரியா மற்றும் கரூரை சேர்ந்த மணிகண்டன், 28, அவரது மனைவி இந்திராணி இருந்தனர்.
யுவேந்திரன் வெளியே சென்ற-நேரம், அஜித் மற்றும் மணிகண்டன், ௧3 செம்மறி ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி திருட முயன்றனர். அக்கம்பக்கத்தினர் தகவ-லின்படி காங்கேயம் போலீசில் புகாரளித்தார். அஜித் மற்றும் மணிகண்டனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப-டுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

