/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயம் காக்க நதிகள் இணைப்பு அவசியம் பிரதமருக்கு ஐக்கிய விவசாயிகள் சங்கம் கடிதம்

ADDED : ஜூன் 13, 2024 02:13 AM
ஈரோடு:'விவசாயம் காக்க,நதிகள் இணைப்பை அவசியமாக நிறைவேற்ற வேண்டும்' என, தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலதலைவர் சண்முகம்,பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாகவலியுறுத்தி உள்ளார்.
அக்கடிதத்தில்,தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம்கூறியிருப்பதாவது:
விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க, வீணாககடலில் கலக்கும்தண்ணீரை பற்றாக்குறை பகுதிகளுக்கு திருப்ப, இந்தியநதிகள் இணைப்பு அல்லது வருவாயுடன் கூடிய நீர் வழிச்சாலை அமைக்கவேண்டும்.
விவசாயிகளின் உற்பத்தி செலவு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம், சலுகைகள் வழங்க வேண்டும்.
எத்தனால் பயன்பாட்டை அதிகரித்து, கரும்பு உற்பத்தியை பெருக்க வேண்டும். எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமலாக்கக்கூடாது.
இந்திய நதிகள் அனைத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில், ரயில்வே நிர்வாகம் போல கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள நதிநீர் தாவா தீர்வுகளை அமலாக்க வேண்டும். தமிழகம் கோரி உள்ள வறட்சி நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.