/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.மா.கா., வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரசாரம்
/
த.மா.கா., வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரசாரம்
த.மா.கா., வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரசாரம்
த.மா.கா., வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பிரசாரம்
ADDED : ஏப் 13, 2024 10:52 AM
பள்ளிப்பாளையம்: ஈரோடு லோக்சபா தொகுதியின், பா.ஜ., கூட்டணியில் உள்ள, த.மா.கா., வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதியில், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நேற்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் பணக்காரர்கள் தான் வங்கி கணக்கு, வீட்டில் காஸ் இணைப்பு வைத்திருந்தனர். ஆனால், அந்த நிலைமை மாறி, தற்போது அனைவருக்கும் வங்கி கணக்கு, காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, கோடிக்கணக்கான பெண்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி உள்ளார்.
அரசு உதவிகள் அனைத்தும், வங்கி கணக்கு மூலம் டில்லியில் இருந்து சிந்தாமல், சிதறாமல் நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு வருகிறது. இது பிரதமர் ஏற்படுத்திய மாற்றம். ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில், இலவச தடுப்பூசி வழங்கி நம்முடைய உயிரை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. ஸ்டாலின், ராகுல் இவர்களும் மோடி திட்டத்தின் பயனாளிகள் தான். ஏனென்றால் அவர்களுக்கும் சேர்த்து தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இன்று பல்வேறு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, ஐரோப்பியா நாடுகளுக்கும் நாமக்கல் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 சதவீதம் மோடி தான் அடுத்த பிரதமர். அதை யாரும் மாற்ற முடியாது. நாம் ஊரில் இருந்து ஒரு, எம்.பி., செல்ல வேண்டும். அதனால், சைக்கிள் சின்னத்தில் விஜயகுமாருக்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

