sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'

/

'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'

'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'

'மழை காலம் துவங்குவதால் மின் பயன்பாட்டில் கவனம் தேவை'


ADDED : ஆக 09, 2024 02:37 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மழை காலம் துவங்குவதால், மின் பயன்பாட்டில் கவனமாக செயல்பட வேண்டும் என, ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்-பார்வை பொறியாளர் கலைசெல்வி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மின்சார ஒயரிங் பணிகளை, அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்த-தாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். பிளக்குகளை பொருத்தும் முன்பும், எடுக்கும் முன்பும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். மின் கசிவு தடுப்பான்களை இல்லங்களில் பயன்ப-டுத்த வேண்டும். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஒயரிங் சரி செய்து கொள்ள வேண்டும். குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்-களில் சுவிட்சை பொருத்தக்கூடாது. மின் கம்பம், அவற்றை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்-களில் பந்தல் அமைக்கவும், விளம்பர பலகையும் கட்டக்கூடாது.

மழை காலத்தில் மின் மாற்றி, மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள், அறுந்து விழுந்த மின் கம்பிகளின் அருகே செல்லக்கூடாது. மின் வேலிகள் அருகே சிறுநீர் கழிக்கக்-கூடாது. மின்சார தீ விபத்துக்கு, தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இடி, மின்னலின்போது வெட்ட வெளி, மரத்தடி, தண்ணீர் தேங்கிய இடத்தில் நிற்கக்கூடாது.

மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தாலும், மின் கம்பிகள் அறுந்து கிடந்தாலும், 94987 94987, வாட்ஸ் ஆப் எண்- 94458 51912 என்ற எண்களில் புகைப்படத்துடன் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us