/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் அருகே காற்று:சேதமான வாழைகள்
/
அந்தியூர் அருகே காற்று:சேதமான வாழைகள்
ADDED : மே 07, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் அடித்த பலத்த காற்றில், காட்டூர் பிரிவில் பயிரிட்டிருந்த செவ்வாழை மரங்கள் முறிந்துள்ளன.
அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில், வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டு, பலத்த காற்று வீசியது. இதில், அந்தியூர் அருகே காட்டூர் பிரிவில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை மரங்கள் முறிந்து விழுந்தது.