/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடி பெருக்கை முன்னிட்டு சிவன்மலையில் வழிபாடு
/
ஆடி பெருக்கை முன்னிட்டு சிவன்மலையில் வழிபாடு
ADDED : ஆக 04, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற திருத்தலமான சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆடிப்பெருக்கை ஒட்டி நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
இதனால் கோவிலுக்கு காலை முதலே திரளான பக்தர்கள் வரத் தொடங்கினர். இதனால் மலை கோவிலில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடிப்பெருக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள், பணியாளர்கள் செய்திருந்தனர்.