/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேலை வாங்கி தருவதாக மோசடி 2 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் கைது
/
வேலை வாங்கி தருவதாக மோசடி 2 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் கைது
வேலை வாங்கி தருவதாக மோசடி 2 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் கைது
வேலை வாங்கி தருவதாக மோசடி 2 ஆண்டுகளுக்கு பின் வாலிபர் கைது
ADDED : மே 01, 2024 01:57 PM
அந்தியூர்: அந்தியூர் அருகே சிந்தகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அங்கமுத்து, 32; சென்னையை சேர்ந்த குருதேவ் மூலம் ராஜேஷ்குமார் அறிமுகமானார். தலைமை செயலகத்தில் பி.ஆர்.ஓ., வேலை பார்ப்பதாக கூறியவர், அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பி, 16.50 லட்சம் ரூபாயை அங்கமுத்து தந்துள்ளார். பணத்தை
பெற்றவர் தலைமறைவானார்.
இதுகுறித்த அங்கமுத்து புகாரின்படி, அந்தியூர் போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். இரு ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் ராஜேஷ்குமார் பதுங்கி இருப்பதாக, அந்தியூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், ராஜேஷ்குமாரை கைது செய்து, அந்தியூர் ஸடேஷனுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.