ADDED : டிச 07, 2024 07:16 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை மற்றும் புயலாலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பல இடங்களில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டாலும், துாரல் மழை மட்டும் பெய்தது. இருப்பினும்
அம்மாபேட்-டையில், 10 மி.மீ., பவானியில், 3.6 மி.மீ., மழை பதிவாகி இருந்-தது. நேற்று காலை முதல் வழக்கம்போல்
வெயில் வாட்டியது.எரிவாயு தகன மேடைசென்னிமலையில் பூஜைசென்னிமலை, டிச. 7-சென்னிமலை பேரூராட்சி சார்பாக, நவீன எரிவாயு தகன மேடை உப்பிலிபாளையம் ரோடு சுடுகாட்டில் அமையவுள்ளது.
இதற்கு அரசு, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான பூஜை நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி
அசோக், யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ மற்றும் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு, பேரூராட்சி
கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தந்தை இறந்த சோகத்தில்மகன் துாக்கில் தற்கொலைசென்னிமலை: சென்னிமலையை அடுத்த குமாரபுரி, பாப்பன்காட்டை சேர்ந்-தவர் சரவணன், 46; பனியன் நிறுவன ஊழியர். திருமணமாகி
ஒரு மகள், மகன் உள்ளனர். சரவணனின் தந்தை தங்கவேல் ஒரு மாதத்துக்கு முன் இறந்து விட்டார். சோகத்தில்
வேலைக்கு செல்-லாமல் சரவணன் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு
கொண்டார். குடும்பத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்-தனர். மருத்துவர்கள்
பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சென்னிமலை போலீசார் விசா-ரித்து
வருகின்றனர்.