/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 நாள் வேலையில் கூலி பாக்கி தேசிய அளவில் உள்ளது; கலெக்டர்
/
100 நாள் வேலையில் கூலி பாக்கி தேசிய அளவில் உள்ளது; கலெக்டர்
100 நாள் வேலையில் கூலி பாக்கி தேசிய அளவில் உள்ளது; கலெக்டர்
100 நாள் வேலையில் கூலி பாக்கி தேசிய அளவில் உள்ளது; கலெக்டர்
ADDED : ஜன 27, 2024 04:19 AM
ஈரோடு: குடியரசு தினத்தை ஒட்டி, ஈரோடு யூனியன் பிச்சாண்டாம்பாளையம் பஞ்., கிராமசபை கூட்டம் நடந்தது. தலைவர் மோகனபிரியா வரவேற்றார். யூனியன் தலைவர் பிரகாஷ், உதவி இயக்குனர் (பஞ்.,க்கள்) சூரியா முன்னிலை வகித்தனர்.
'குப்பைகளை சாலையில் போட்டு எரிப்பதால், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. சமுதாய கூடம் கட்டி, 5 ஆண்டாகியும் திறக்கப்படவில்லை. நுாறு நாள் வேலை திட்டத்தில் முழுமையாக பணி வழங்கவில்லை. பலருக்கு சம்பளம் வரவில்லை' என்பது உள்பட பல்வேறு குறைகளை தெரிவித்து, மக்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: சமுதாய கூடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நுாறு நாள் வேலை திட்டத்தில் முழுமையாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்கான கூலியை மத்திய அரசு, 2 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கும். கூலி தாமதமாகும் பிரச்னை தேசிய அளவில் உள்ளது. இவ்வாறு பேசினார்.