/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை தினமும் 10 அரசு பஸ்கள் நிறுத்தம்
/
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை தினமும் 10 அரசு பஸ்கள் நிறுத்தம்
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை தினமும் 10 அரசு பஸ்கள் நிறுத்தம்
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை தினமும் 10 அரசு பஸ்கள் நிறுத்தம்
UPDATED : ஜூலை 08, 2024 11:09 AM
ADDED : ஜூலை 08, 2024 07:01 AM
ஈரோடு : போதிய டிரைவர், கண்டக்டர்கள் இல்லாததால், தினமும், 10 அரசு பஸ்கள் இயக்கப்படாமல், நிறுத்தப்படுவதாக ஊழியர்கள் மத்தியில் வருத்தம் எழுந்துள்ளது.
ஈரோடு அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி,சத்தி, நம்பியூர், பெருந்துறை என, 13 கிளைகள் உள்ளன. தற்போது ஈரோடு மண்டலத்தில், 170 கண்டக்டர், 100க்கும் மேற்பட்ட டிரைவர் பணியிடம் காலியாக உள்ளது. செக்கிங் இன்ஸ்பெக்டர்கள், 100 பேருக்கு, 9 பேர் மட்டுமே உள்ளனர். இதேபோல் தொழில் நுட்ப பிரிவிலும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது.
போதிய டிரைவர், கண்டக்டர் இல்லாததால் கிளைகளில் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. வரும் நாட்களில் இந்நிலை மேலும் மோசமாகும் நிலை உருவாகியுள்ளதாக, போக்குவரத்து ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுபற்றி ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து, ஈரோடு மண்டல பொது செயலாளர் திருமுருகன் கூறியதாவது: கடந்த, 5 ஆண்டுக்கும் மேலாக புதிதாக டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போது ஒவ்வொரு கிளையிலும், 30 முதல் 40 டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையாகவே உள்ளது.
தற்காலிக தொழிலாளர்களை கொண்டு, 30 முதல் 40 நாட்களுக்கு பஸ்சை இயக்குகின்றனர். பின் அவர்களை பணி நீக்கம் செய்கின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின் மீண்டும் பணி செய்ய அனுமதிக்கின்றனர். போதிய டிரைவர், கண்டக்டர் இல்லாமல் ஒவ்வொரு கிளையிலும், 10 பஸ்கள் வரை தினமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. டவுன் பஸ்களை நிறுத்துவது இல்லை.மாறாக வெளியூர் சென்று வரும் வசூல் குறைந்த, ஒரே வழித்தடத்தில் பலமுறை சென்று வரும் பஸ்கள் இயக்கத்தை நிறுத்தும் நிலை தொடர்கிறது. தற்போது அவுட்சோர்சிங் முறையில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்கவுள்ளனர். விரைவில் பஸ்களும் கூட அவுட்சோர்சிங் கைக்கு சென்றாலும் ஆச்சர்யமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.