/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கிய 10,000 வாழை மரம்

ADDED : ஆக 03, 2025 01:27 AM
பவானிசாகர், பவானிசாகர் அணை நீர்மட்டம், 101 அடியை எட்டியுள்ளது. அணை நீர்மட்டம், 95 அடியை கடந்தால், அணை நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, கன்ராமொக்கை,வால்கரடு மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
ஏழு மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட கதலி, நேந்திரன் ரக வாழை, தற்போது குலைதள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் அணையில்,101 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சித்தன்குட்டை, ஜெ.ஜெ.நகர், புதுக்காடு, கன்ராமொக்கை பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பவானிசாகர் அணையில் இந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி மூன்றாண்டுகளாகிறது. சில மாதங்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றால் வாழைகள் சேதமாகின. தற்போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கிவிட்டன.
இவ்வாறு கூறினர்.