/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் முறிந்து விழுந்த மின் கம்பம் மின் தடை நாளால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ADDED : ஆக 03, 2025 01:27 AM
அந்தியூர், அந்தியூரில், பர்கூர் ரோட்டில், போலீஸ் ஸ்டேஷன் பஸ் நிறுத்த பகுதியில், தனியார் மருத்துவமனை அருகில், சாலையோரம் மின் கம்பம் இருந்தது. அடிப்பாகம் சேதமாகி இருந்தது. இதனால் முறிந்து விழும் அபாயம் இருந்தது.
எனவே கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக மின்வாரிய அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும், மின்வாரிய அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை. மக்கள் பயந்தபடியே நேற்று மாலை, 4:30 மணிக்கு கம்பம் முறிந்து, அருகிலிருந்த கட்டடத்தில் சாய்ந்தது. அப்போது கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சென்ற ஊழியர்கள், பழுதடைந்த கம்பத்துக்கு பதிலாக புதிய கம்பத்தை நட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின் மின் கம்பிகளை இணைத்தனர். அந்தியூர் நகர் பகுதியில் நேற்று மாதாந்திர மின்தடை அமலில் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.