sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பிற உயிர்களின் ஆரோக்கியமும் மனித ஆரோக்கியத்துக்கு அவசியம்' புத்தக திருவிழாவில் மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

/

'பிற உயிர்களின் ஆரோக்கியமும் மனித ஆரோக்கியத்துக்கு அவசியம்' புத்தக திருவிழாவில் மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

'பிற உயிர்களின் ஆரோக்கியமும் மனித ஆரோக்கியத்துக்கு அவசியம்' புத்தக திருவிழாவில் மருத்துவர் கு.சிவராமன் பேச்சு

'பிற உயிர்களின் ஆரோக்கியமும் மனித ஆரோக்கியத்துக்கு அவசியம்' புத்தக திருவிழாவில் மருத்துவர் கு.சிவராமன் பேச்சு


ADDED : ஆக 03, 2025 01:27 AM

Google News

ADDED : ஆக 03, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,:ஈரோடு, சிக்கிய்ய அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை நேர அரங்குக்கு, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.

'எனைத்தானும் நல்லவை கேட்க' என்ற தலைப்பில் முனைவர் ராகவேந்திரன் பேசுகையில், ''திருக்குறளே, எல்லா நுால்களுக்கும் மூலம். அதன் சாயல் இல்லாத நுால்களே இல்லை. கற்றவர், கல்லாதவர்களுக்கும் அறம், நீதி, ஒழுக்கம் என அனைத்தையும் கூறி, உலகின் சமச்சீரான புத்தகமாக விளங்குகிறது,'' என்றார்.

'மண்ணுயிர் நுண்ணுயிர் உன்உயிர்' என்ற தலைப்பில், டாக்டர் கு.சிவராமன் பேசியதாவது: ஆரோக்கியம், உடல் நலம் குறித்த தேடலில் தவறாது இடம் பெறுவது மண்ணுயிர், நம் குடலுக்குள் உள்ள உயிர்களுமாகும். இவற்றை தவிர்த்து மனிதனை மையப்படுத்தி சில காலம் நகர்ந்ததே, இடையில் நாம் பல சவால்களை சந்திக்க காரணமாகிறது. அப்போதுதான் 'கொரோனா' வந்து நம்மை முடக்கிப்போட்டது. நமது தவறை கொரோனாதான் நிரூபித்து காட்டியது.

அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் குதிரை லாயத்தில் சில குதிரையும், அதன்பின், குதிரை ஓட்டியும் இறந்தனர். 'ெஹன்ரா' என்ற வைரஸ் குதிரையில் இருந்து மனிதர்களையும் தாக்குவதை அறிந்தனர். அதன்பின் சீனாவில் பிற உயிரில் இருந்து மனிதர்களை கொரோனா என்ற வைரஸ் தாக்கியதை கண்டோம். அதுபோல பறவை, பன்றி, எலிகளில் இருந்து காய்ச்சல் என பல நோய்கள் வந்தன. இதை பார்க்கும்போதுதான், உடல் ஆரோக்கியம் பற்றி பேச துவங்குகிறோம்.

இதயம், கல்லீரல் என உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தாலும், மனமும் சீராக இருந்தால்தான் நாம் நன்றாக வாழ முடியும் என இப்போது சொல்கின்றனர். மனம் நன்றாக இருந்தால்தான் நமது உடலில் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளும் நலமாக இருக்கும்.

அதுபோல உலகில் பூ, தேன்சிட்டுகள் என கோடான கோடி உயிரினங்களும் நலமாக இருக்க வேண்டும். இதைத்தான் உலக சுகாதார மையம், 'ஒன் ெஹல்த்' என்கிறது. மனிதன் ஆரோக்கியமாக இருக்க, பிற உயிர்களும் ஆரோக்கியமாக இருந்தாக வேண்டும். எனவே மண்ணையும், நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

இன்று...

புத்தக திருவிழாவில் இன்று மாலை அரங்கில், சுழலும் சொல்லரங்கம் நிகழ்வு, திண்டுக்கல் லியோனி தலைமையில் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us