/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
11ம் ஆண்டு துவக்க விழா த.மா.கா., கொண்டாட்டம்
/
11ம் ஆண்டு துவக்க விழா த.மா.கா., கொண்டாட்டம்
ADDED : நவ 29, 2024 01:04 AM
11ம் ஆண்டு துவக்க விழா
த.மா.கா., கொண்டாட்டம்
ஈரோடு, நவ. 29-
தமிழ் மாநில காங்., கட்சி, 11ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ஈரோடு மாநகர் மாவட்ட த.மா.கா., சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஆறுமுகம் கட்சி கொடியேற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் இனிப்பு வழங்கினார். மாநில துணை தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜ் ஆகியோர் மூப்பனார் படத்துக்கு மாலை அணிவித்து பேசினர்.
* சென்னிமலையில் நடந்த விழாவுக்கு, வட்டார தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். சென்னிமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், பழம், ரொட்டியை, மாநில துணைத் தலைவர் விடியல் சேகர்
வழங்கினார்.

