/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ., எழுத்து தேர்வில் 1,231 பேர் ஆப்சென்ட்
/
எஸ்.ஐ., எழுத்து தேர்வில் 1,231 பேர் ஆப்சென்ட்
ADDED : டிச 22, 2025 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ., பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான எழுத்து தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வேளாளர் பொறியியல் கல்லுாரி என மூன்று மையங்களில், 3,491 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்-பட்டு இருந்தது.
முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித்தேர்வு நடந்தது. தேர்வில், 908 ஆண்கள், 323 பெண்கள் என, 1,231 பேர் பங்கேற்கவில்லை. கோவை டி.ஐ.ஜி., சசி மோகன், எஸ்.பி., சுஜாதா ஆகியோர், தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

