தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சதுமுகை பஞ்., அலுவலகத்தை முற்றுகை

125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சதுமுகை பஞ்., அலுவலகத்தை முற்றுகை

125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சதுமுகை பஞ்., அலுவலகத்தை முற்றுகை


ADDED : ஜூலை 29, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய-ளிப்பு திட்டத்தை, விபிஜி ராம்ஜி என பெயர் மாற்றம் செய்த மத்திய அரசு, 125 நாட்களுக்கு வேலை வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டம் கடந்த, 1ம் தேதி அமலுக்கு வந்தது. இந்நி-லையில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சதுமுகை பஞ்.,ல் இதுவரை, தொழிலாளர்க-ளுக்கு பணி வழங்கப்படவில்லை.

இதனால், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஞ்., அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு வேலை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய புதிய திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படும். வழங்கப்படாத நிலையில் வேலை இழப்பு உதவித்தொகை வழங்க வழி-வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பஞ்., நிர்-வாகம் செயல்பட வேண்டும் என்று கூறி, முற்-றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலாளர் குமாரிடம் விண்ணப்பம் அளித்து, கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us