/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் விடுமுறையில் மது விற்ற 13 பேர் கைது
/
டாஸ்மாக் விடுமுறையில் மது விற்ற 13 பேர் கைது
ADDED : செப் 07, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :மிலாடி நபியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறதா என்று, மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டம் முழுவதும், ஐந்து பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்து, 276 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்தம், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.