/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி தாலுகாவில் ஐந்து ஆண்டுகளில் சராசரியை விட 1,342 மி.மீ., கூடுதல் மழை
/
கோபி தாலுகாவில் ஐந்து ஆண்டுகளில் சராசரியை விட 1,342 மி.மீ., கூடுதல் மழை
கோபி தாலுகாவில் ஐந்து ஆண்டுகளில் சராசரியை விட 1,342 மி.மீ., கூடுதல் மழை
கோபி தாலுகாவில் ஐந்து ஆண்டுகளில் சராசரியை விட 1,342 மி.மீ., கூடுதல் மழை
ADDED : ஜன 16, 2024 10:25 AM
கோபி: கோபி தாலுகாவில், கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியை விட, 1,342 மி.மீ., கூடுதலாக மழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகாவில் மாதந்தோறும் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுதோறும் ஜன., 18.5 மி.மீ., பிப்., 14.5, மார்ச்., 21.6, ஏப்., 54.9, மே.,90.4, ஜூன், 37.1, ஜூலை, 40.4, ஆக.,75.4, செப்.,100.3, அக்., 191.5, நவ.,, 118.6, டிச.,22.1 என மொத்தம், 12 மாதங்களில் சராசரியாக, 785.3 மி.மீ., மழை பெய்ய வேண்டும்.
அதன்படி கடந்த, 2018ல், ஓராண்டில் மட்டும், 964 மி.மீ., மழையளவு பதிவாகி, சராசரியை விட 179 மி.மீ., மழை கூடுதலாக பெய்திருந்தது. 2019ல், 699 மி.மீ., மழையளவு பதிவாகி, சராசரியை விட, 86 மி.மீ., குறைவாக பெய்திருந்தது. 2020ல், 965 மி.மீ., மழையளவு பதிவாகி, சராசரியை விட, 180 மி.மீ., கூடுதலாக பெய்திருந்தது.
கடந்த 2021ல், 1,210 மி.மி., மழையளவு பதிவாகி, சராசரியை விட, 425 மி.மீ., கூடுதலாக பெய்திருந்தது. 2022ல், 1,194 மி.மீ., மழை பெய்து சராசரியை விட, 409 மி.மீ., கூடுதலாக பெய்திருந்தது. 2023ல், 934 மி.மீ., மழையளவு பதிவாகி, சராசரியை விட, 149 மி.மீ., கூடுதலாக பெய்திருந்தது. கோபி தாலுகாவில் மட்டும், கடந்த ஆறு ஆண்டுகளில், 2019ம் ஆண்டு நீங்கலாக, மற்ற ஆண்டுகளில் சராசரியை விட மொத்தமாக, 1,342 மி.மீ., கூடுதலாக மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.