/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்
/
போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்
போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்
போதை பொருட்களை கடத்தி வந்த 145 வாகனங்கள் விரைவில் ஏலம்
ADDED : டிச 11, 2025 06:34 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத் தில், போதை பொருட்களை கடத்தி வந்த-தாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 145 வாகனங்கள் விரைவில் ஏலத்தில் விடப்பட
உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்களை கடத்தி, விற்க வந்ததாக ஈரோடு மாவட்ட மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் இதுவரை, 129 டூவீலர்கள், 16 நான்கு சக்கர வாக-னங்கள் என மொத்தம், 145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்-டுள்ளன. ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாகனங்களை பொது ஏலம் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசு மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள், நேற்று வாகனங்களுக்கு விலை நிர்-ணயம் செய்யும் பணியை மேற்கொண்டனர். எனவே விரைவில் ஏலம் விடுவதற்கான
அறிவிப்பு வெளியாகும்.