/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
415 பேரிடம் ரூ.62 கோடி மோசடியில் 15,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
/
415 பேரிடம் ரூ.62 கோடி மோசடியில் 15,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
415 பேரிடம் ரூ.62 கோடி மோசடியில் 15,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
415 பேரிடம் ரூ.62 கோடி மோசடியில் 15,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : செப் 11, 2025 01:30 AM
ஈரோடு :ஈரோட்டில், 415 பேரி டம், 62 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில், 15 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை, கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், நசியனூர் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் நிறுவனம், 2017ல் துவங்கப்பட்டது. நிர்வாக இயக்குனராக ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து முதல் வீதி நவீன்குமார், 38, செயல்பட்டார். கவர்ச்சி விளம்பரம் வெளியிட்டு, முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்களிடம் முதலீடு பெற்றனர்.
இரு தவணை மட்டுமே பணத்தை வழங்கிய நிலையில், நிறுவனத்தை பூட்டி தப்பினர். ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நவீன்குமாரை கைது செய்தனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முன்னாள் ராணுவ வீரர் முத்துசெல்வன் உட்பட ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். இரண்டு மோசடி நிறுவனங்களிலும், 415 பேர், 62 கோடி ரூபாய் வரை முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்டதாக மனு அளித்தனர்.இது தொடர்பாக, 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்), ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரவிக்குமார் தெரிவித்தார்.