ADDED : அக் 17, 2026 07:05 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பல இடங்களில்,
இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை நிலவரப்படி
ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாநகரில், 156 மி.மீ., மழை
பெய்துள்ளது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-94, பவானி-72, குண்டேரிப்பள்ளம்-57,
பவானிசாகர் அணை-56.2, சென்னிமலை-52, பெருந்துறை-51, கொடுமுடி-33.4,
நம்பியூர்-24, கவுந்தப்பாடி-21.6, அம்மாபேட்டை-21.2,
வரட்டுப்பள்ளம் அணை-20.6, கோபி-19.2, இலந்தைகுட்டைமேடு-15.6,
தாளவாடி-15.2, கொடிவேரி அணை-13.2, சத்தியமங்கலம்-9. நேற்று காலை
மாநகர், மாவட்டத்தில் வழக்கம்போல் வெயில் வாட்டி
வதைத்தது.
