தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி வனத்துறை அலுவலகம் முற்றுகை

சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி வனத்துறை அலுவலகம் முற்றுகை

சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி வனத்துறை அலுவலகம் முற்றுகை


ADDED : அக் 17, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியான தாளவாடிமலை ஆசனுாரில் உள்ள அரேபாளையம், ஒங்கல் வாடி, பழைய ஆசனுார், பங்களாதொட்டி உள்ளிட்ட பகுதிகளில், சமீபமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

தினமும் இப்பகுதிக்கு இரவில் வரும் சிறுத்தை, ஆடு, மாடு, எருமை, நாய்களை கடித்து கொன்று வருகிறது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசனுாரில் தங்கும் விடுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை, மாடு மற்றும் கன்றுக்குட்டியை துரத்திய காட்சி பதிவாகி உள்ளது.மேலும் அரேபாளையம் சென்டர் தொட்டியை சேர்ந்த சித்தம்மாள் என்பவரின் கன்றுக்குட்டியை நேற்று அதிகாலை சிறுத்தை தாக்கி கொன்று விட்டு பாதி உடலை வீசி சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், 30க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஆசனுார் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உயரதிகாரிகளிடம் பேசி இரண்டு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் கூறவே மக்கள் கலைந்து சென்றனர்.

மீண்டும் வந்த சிறுத்தை ஆசனுாரை அடுத்த ஒங்கல்வாடியில் விநாயகர் கோவில் பகுதிக்கு நேற்றிரவு, 7;00 மணிக்கு வந்த சிறுத்தை, அப்பகுதியில் நடமாடிய ஒரு தெருநாயை கவ்வி சென்றது. இதையறிந்து சென்ற வனத்துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us