/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சதுர்த்திக்கு 1,563 சிலைகள் பிரதிஷ்டை: கோலாகலமாக விநாயகர் வழிபாடு
/
சதுர்த்திக்கு 1,563 சிலைகள் பிரதிஷ்டை: கோலாகலமாக விநாயகர் வழிபாடு
சதுர்த்திக்கு 1,563 சிலைகள் பிரதிஷ்டை: கோலாகலமாக விநாயகர் வழிபாடு
சதுர்த்திக்கு 1,563 சிலைகள் பிரதிஷ்டை: கோலாகலமாக விநாயகர் வழிபாடு
ADDED : ஆக 28, 2025 02:00 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சதுர்த்தியையொட்டி, 1,563 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, அருகம்புல், தேங்காய், பழம் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல் படைத்து வழிபட்டனர். ஹிந்து அமைப்பு
கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். மொத்தம், 1,563 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின், பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகர் ஹிந்து முன்னணி சார்பில், சம்பத் நகர் நசியனுார் சாலையில், 11 அடி உயர வெற்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை வணங்கினர்.
ஈரோடு சம்பத் நகர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, வலம்புரி விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்திலும், சூரம்பட்டி நால் ரோடு வலம்புரி செல்வ விநாயகர் ராஜ அலங்காரத்திலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வலம்புரி விநாயகர், முனிசிபல் காலனியில் உள்ள சக்தி விநாயகர் தங்க கவச அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.
விநாயகர் சிலை பிரதிஷ்டை, சதுர்த்தி கொண்டாட்டம் போலீசார் எதிர்பார்த்ததை விட மிக அமைதியாக இருந்தது. விநாயகர் சிலை பிரதிஷ்டை, கொண்டாட்டத்தை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
* சென்னிமலை ஒன்றிய ஹிந்து முண்ணனி சார்பில், பஸ் ஸ்டாண்ட் முன், 9 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தை
களுக்கு விநாயகர் படம் வரைவதற்கான ஓவியபோட்டி நடத்தப்பட்டது. ஒன்றிய பா.ஜ., நிர்வாகி
கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சென்னிமலை ஒன்றிய ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் சின்னுசாமி, நந்தகுமார்,
தமிழரசன் செய்திருந்தனர்.
* அந்தியூர் சுற்று வட்டாரத்தில் பொதுமக்கள் சார்பில், 21 சிலைகள், ஹிந்து முன்னணி சார்பில், 15 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளித்திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், 38 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெள்ளித்திருப்பூரில், ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிலை, நேற்று மாலை அம்மாபேட்டையிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சிலைகளோடு சேர்ந்து, காவிரியாற்றில் கரைக்கப்பட்டது.
* கோபி அருகே வேலுமணி நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், மூலவருக்கு நேற்று காலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில்களில் உள்ள விநாயகருக்கு, சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி ஓங்கார பிள்ளையார், சக்தி விநாயகர், அரசமரத்தடி விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வன்னி மர வரசித்தி விநாயகருக்கு கணபதி ஹோமத்துடன் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூஷிக வாகனத்தில் உற்சவர் விநாயகர் எழுந்தருளி கோவிலில் உலா நடைபெற்றது. மாதம்
பாளையம், காவிலிபாளையம், தொட்டம்பாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், மூன்று அடி முதல், 12 அடி வரை, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
71 டன் காய்கறி விற்பனை
விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு வரத்தான, 71.07 டன் காய்கறிகள், ரூ.28.70 லட்சத்துக்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை, உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட, உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை மலிவாகவும், தரமானதாகவும் கிடைப்பதால், காய்கறிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 25.30 டன் காய்கறிகள், ரூ.10 லட்சத்து, 43 ஆயிரத்து, 243க்கு விற்பனையானது. மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் வரத்தான, 71.07 டன் காய்கறிகள், ரூ.28 லட்சத்து, 70 ஆயிரத்து, 680 ரூபாய்க்கு விற்பனையானதாக, உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

