/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் முகாமில் 17,400 மனுக்கள்
/
வாக்காளர் முகாமில் 17,400 மனுக்கள்
ADDED : நவ 19, 2024 01:23 AM
வாக்காளர் முகாமில்
17,400 மனுக்கள்
ஈரோடு, நவ. 19-
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம், கடந்த, 16, 17ல் ஈரோடு மாவட்டத்தில் நடந்தது.
இதில் வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், தொகுதி மாற்றம், ஆதார் எண்ணை அட்டையுடன் இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் உரிய ஆவணங்களுடன் பெறப்பட்டன. பெயர் சேர்க்க, 8,541 படிவங்களும், வாக்காளர் சேர்ப்பு, நீக்கத்துக்கான ஆட்சேபனைக்கு, 3,062 படிவங்களும், திருத்தம் செய்ய, 5,820 படிவங்கள் என, 17,423 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இப்படிவங்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் விசாரிக்கப்பட்டு, தள ஆய்வுக்குப்பின் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யப்படும்.