/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் 17வது விளையாட்டு விழா
/
நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் 17வது விளையாட்டு விழா
நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் 17வது விளையாட்டு விழா
நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் 17வது விளையாட்டு விழா
ADDED : மார் 17, 2025 04:04 AM
ஈரோடு: ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில், 17வது விளை-யாட்டு விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். விழாவில் இந்திய கைப்பந்து அணி வீரர் நவீன் ராஜா ஜேகப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவை தொடங்கி வைத்தார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் வாழ்த்-துரை வழங்கினர். கல்லுாரி முதல்வர் நந்தகோபால் வரவேற்றார்.
உடற்பயிற்சி பேராசிரியர் பாஸ்கரன், ஆண்டறிக்கை வாசித்தார். இதை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கி பேசினார். இதையடுத்து சிலம்பம் மற்றும் கராத்தேவில் தனித்தனியாக மாணவ-, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். கணினி அறிவியல் துறை மாணவி தீபிகா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உடற்
பயிற்சி பேராசிரியர் பாஸ்கரன், பேராசிரியர்கள், கல்லுாரி ஊழி-யர்கள், மாணவர்கள் செய்தனர்.