ADDED : அக் 27, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருப்பில் 18,405 டன் உரங்கள்
ஈரோடு, அக். 27-
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில், நிலக்கடலை, கரும்பு, சோளம், மஞ்சள், மரவள்ளி, பாக்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தேவையான பூச்சிமருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் யூரியா, 5,055 டன், டி.எ.பி 2,404 டன், பொட்டாஷ், 2,796 டன், காம்ப்ளக்ஸ், 8,150 டன் என, 18,405 டன் உரங்கள் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.