ADDED : நவ 03, 2026 05:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாநகர தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த அக்டோபரில் மாநகரில் பல்வேறு இடங்களில், விதிமீறல் தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 50 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 925 வழக்கு, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக, 200 வழக்குகள் உள்பட, 1,900 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, வாகன உரிமையாளர்களுக்கு, 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் இயக்கிய, 35 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து
அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
