சாலை பணிகளுக்காக போராட்டம் நடத்த வேண்டுமா? 'வெண்பா' கலெக்டருக்கு பா.ஜ., 'அன்பா' கோரிக்கை
சாலை பணிகளுக்காக போராட்டம் நடத்த வேண்டுமா? 'வெண்பா' கலெக்டருக்கு பா.ஜ., 'அன்பா' கோரிக்கை
ADDED : நவ 03, 2026 05:58 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு-கரூர், ஈரோடு-சென்னிமலை சாலை சாலை விரிவாக்கம், பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கும், விபத்து அபாயத்துக்கும் உள்ளாகி வருகின்றனர். இதுபற்றி ஜூலை, 29, ஆக.,19ல் நெடுஞ்சாலை துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. தங்களிடமும் மனு தரப்பட்டது. கடந்த வாரமே பணி தொடங்கப்படும் என உறுதியளித்தும் இதுவரை பணி தொடங்கவில்லை. ஈரோடு-கரூர் சாலையில் கருமாண்டம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே நேற்று முன் தினம் நடந்த விபத்தில், 16 வயது இளம்பெண் பலத்த காயமடைந்தார். ஈரோடு-சென்னிமலை சாலையில் ஐ.டி.ஐ., அருகே காசிபாளையம் பகுதியிலும் சாலைப்பணி முழுமையடையாமல் உள்ளன. நிலுவையில் உள்ள சாலை, பால பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். பணி முடியும் வரை அபாய பகுதிகளில் பாதுகாப்பு தடுப்பு, எச்சரிக்கை விளக்கு அமைக்க வேண்டும். உடனடியாக பணி தொடங்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
