/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி நடப்பாண்டில் ரூ.1.95 கோடி மானியம்
/
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி நடப்பாண்டில் ரூ.1.95 கோடி மானியம்
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி நடப்பாண்டில் ரூ.1.95 கோடி மானியம்
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி நடப்பாண்டில் ரூ.1.95 கோடி மானியம்
ADDED : செப் 19, 2024 08:10 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடப்பாண்டில், ரூ.1.95 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் கற்றல் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதி-களை மேம்படுத்த, ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிதி மூலம், பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல் சூழல் உருவாக்குதல், பள்ளிகளுக்கு தேவையான அடிப்-படை கட்டமைப்பான வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு மேம்ப-டுத்த பள்ளிகள் செலவு செய்து கொள்ளலாம்.இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல் சூழல் உருவாக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்ப-டுத்தவும் நடப்பாண்டிற்கான மானியத்தில், 50 சதவீதம் முதல் தவணையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்படி தொடக்கநிலை அளவில், 1,093 பள்ளிகளுக்கு, ஒரு கோடியே, 33 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்-கொள்ளப்பட்டு வருகிறது. உயர் தொடக்க நிலை அளவில், 189 பள்ளிகளுக்கு, 62 லட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகா-ரிகள் தெரிவித்துள்ளனர்.