ADDED : ஜூன் 14, 2025 07:04 AM
பெருந்துறை: பெருந்துறை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தில் ஒரு வாழை தோட்டத்தில், கடந்த, ௧௧ம் தேதி பெண் உடல் கிடந்தது. பெருந்-துறை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். விசார-ணையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரூபாஜோதி மண்டல் மனைவி சிபானி தாஸ் மோண்டல், 38 என்பது தெரிந்தது. பணிக்கம்பாளையத்தில் ஆறு ஆண்டுகளாக தங்கி, கட்டட கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு, 19 வயதில் ஒரு மகன் உள்ளார். உடற்கூறு பரிசோத-னையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்-தது. உடல் கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கிடைத்த பதிவுகளின் அடிப்படையில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஜட்டே மண்டல், 24, ஜெயன்சாட் காஜி, 38, ஆகியோரை கைது செய்-தனர். இவர்களும் பணிக்கம்பாளையத்தில் தங்கி கட்டட கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் பணம் தருவதாக கூறி, சிபானி தாஸ் மோண்டலை வாழை தோட்டத்துக்கு அழைத்து சென்று இன்பம் அனுபவித்துள்ளனர்.
அப்போது அவர் அணிந்திருந்த தங்க வளையல், மொபைல்-போனை பறிக்க முயன்றுள்ளனர். தர மறுத்து போராடியவரை, கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.
இருவரையும் பெருந்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போலீசார்,
ஈரோடு மாவட்ட சிறையில்
அடைத்தனர்.