ADDED : ஜூலை 26, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானியில் பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பவானி
அருகே ஊராட்சிக்கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 30; வீட்டு முன்
நிறுத்தியிருந்த இவரின் பல்சர் என்.எஸ்.160 பைக் திருட்டு போனது.
புகாரின் அடிப்படையில் பவானி போலீசார் களவாணிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் வள்ளலார் மேடு ஆகாஷ், 23; சேலம் மாவட்டம்
மேட்டூர் ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்த குழந்தைவேல், 26, ஆகியோரை கைது
செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
