ADDED : மே 27, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:கடம்பூர் போலீசார் குன்றி மாகாளி தொட்டி பகுதியில், நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் குன்றியை சேர்ந்த மாதேவன், 54, அணில் நத்தத்தை சேர்ந்த கும்பேஸ்வரன், 38, ஆகியோர் வந்தனர்.
அவர்களிடம் சோதனை செய்ததில், 500 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையத்தில் இருந்து விற்பனை செய்வதற்காக வாங்கி வந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
