/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்கள் கடித்து 2 கன்று குட்டி பலி
/
தெருநாய்கள் கடித்து 2 கன்று குட்டி பலி
ADDED : செப் 11, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி ஐந்தாவது வார்டு குமிலன்பரப்பில் வசிப்பவர் சின்னசாமி. தோட்டத்தில் பசு மாடு, எருமை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாடுகளை மேய்த்த பின் தோட்டத்தில் கட்டியிருந்தார்.
தோட்டத்துக்குள் புகுந்த தெரு நாய்கள், தோட்டத்தில் இருந்த இரு கன்று குட்டிகளை சுற்றி வளைத்து கடித்தன. மாடுகளின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்தனர். ஆனாலும் இரு கன்று குட்டிகளும் பலியாகி விட்டன. இதனால் அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர்அச்சமடைந்துள்ளனர்.