ADDED : அக் 06, 2024 03:58 AM
சேலம்: திருப்பூரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி தேவி. இவர்களது மகன் ஹரிஷ், 8; மூன்றாம் வகுப்பு மாணவன்.காலாண்டு விடுமுறையால் மகனுடன், சேலம் தாதம்பட்டியில் உள்ள அவரது அக்கா ராதா வீட்டுக்கு தேவி வந்தார்
. ஹரிஷூம், பெரியம்மா மகனுமான, ஏழாம் வகுப்பு மாணவன் சந்தோஷ், 12, ஆகியோர், அல்லிக்குட்டை ஏரியில் மீன் பிடித்து விளையாட நேற்று மதியம், 2:30 மணிக்கு சென்றனர். நீண்ட நேரமாகியும் வரவில்லை.சந்தேகமடைந்த குடும்பத்தினர் தேடிச்சென்றனர். அப்போது ஏரிக்கரையில் சைக்கிள், செருப்புகள் கிடந்தன. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மக்கள் உதவியுடன், ஏரியில் தேடினர். அப்போது இரு சிறுவர்களையும் மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.