ADDED : மே 09, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாவட்டத்தில் கடந்த, 7, 8ல் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த தகவல், மக்களுக்கு நம்பிக்கையை சற்று ஏற்படுத்தி இருந்தது. மாநகரின் ஓரிரு இடங்களில், நேற்று காலை லேசான சாரல் மழை சில நிமிடங்கள் பெய்து நின்றது. அதன் பின் வழக்கம் போல் வெ யில் சுட்டெரித்தது. அந்தியூரை அடுத்த வரட்டுபள்ளத்தில் மட்டும் 2 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை.