ADDED : செப் 07, 2026 05:56 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மணல்மேடு கூட்ஸ்ஷெட் எதிர் சென்னிமலை சாலையை சேர்ந்த, 14 வயது சிறுவன்,
இரவில் வீட்டுக்கு சென்றார். அடையாளம் தெரியாத இருவர், சிறுவனிடம்
மொபைல்போன் கேட்டு பேசியுள்ளனர்.
ஆனால் திரும்ப தர மறுத்து கத்தியால்
தாக்கியுள்ளனர். சிறுவனின் புகாரின்படி சூரம்பட்டி போலீசார்
விசாரித்தனர். இது தொடர்பாக ஈரோடு நாட்ராயன் கோவில் வீதி கட்டட
தொழிலாளி செந்தில்குமார், 23; ஈரோடு பெரியார் நகர் ஓடைபள்ளம்
அசோகபுரி செல்வம் மகன் தொழிலாளி காளியப்பன், 24; ஆகியோரை கைது
செய்தனர். இருவரும் பழங்குற்றவாளிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.
