ADDED : செப் 07, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:சிவகிரி
அருகே அண்ணாமலைக்கோட்டையில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை
பாதுகாப்பதன் அவசியம், அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி
அறிவுத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மெகா
மாரத்தான் போட்டி நடந்தது.
நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது.
கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார். இதில் ஈரோடு, திருப்பூர், கரூர்
உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டதாக போட்டிஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
