ADDED : செப் 07, 2026 05:57 AM

அந்தியூர்:அந்தியூர்
அருகே வட்டக்காடு வனப்பகுதியை ஒட்டிய குட்டைக்கு, 10 நாட்களாக
குட்டி யானை தொடர்ந்து தனியாக வருவதாக, அந்தியூர்
வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தந்தனர்.
அந்தியூர் ரேஞ்சர்
நந்தினி தலைமையில் பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வனத்துறையினர், கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை, 10:00 மணிக்கு குட்டி யானை
ஆஜரானது.
சீமை கருவேல மரத்தை உலுக்கி காய்களை தின்றது.
இதையடுத்து, 10:30 மணிக்கு அடர்ந்த வனப்பகுதிக்கு குட்டியை விரட்டும்
பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். டிரோன் மூலம் காற்றின் சத்தத்தை
ஒலிக்க விட்டு, வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.
மதியம், 3:00 மணிக்கு அங்குள்ள வனத்துக்குள் விரட்டப்பட்டது. தாயை
பிரிந்து அல்லது தாய் இறந்ததால், அல்லது தாய் யானையே விரட்டியதால்
தனியாக வந்திருக்கலாம். இதனால் வனத்துக்குள் விரட்டினாலும் குட்டி
யானையை கண்காணிக்க வன ஊழியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
