ADDED : நவ 02, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நவ. 2-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலுடன், வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. அதேசமயம் மாலை அல்லது இரவில் மழை பெய்வது வாடிக்கையாகி வருகிறது. நேற்று முன்தினம் மாலை, இரவில் பல இடங்களில் லேசானது முதல் கன மழை பெய்தது.
நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கோபியில்-20.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. வரட்டுப்பள்ளம் அணை-13, எலந்தைகுட்டைமேடு-9.2, சென்னிமலை-8, கொடிவேரி அணை-7, நம்பியூர்-2, தாளவாடி-1, ஈரோட்டில்-0.2 மீ.மீ., மழை பதிவானது. வழக்கம்போல நேற்று பகலில் கடும் வெயில் வாட்டியது.