/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடுப்பணை கட்டாமலே ரூ.20.46 லட்சம் மோசடி; அழைப்பிதழ் அச்சடித்து பா.ஜ., குற்றச்சாட்டு
/
தடுப்பணை கட்டாமலே ரூ.20.46 லட்சம் மோசடி; அழைப்பிதழ் அச்சடித்து பா.ஜ., குற்றச்சாட்டு
தடுப்பணை கட்டாமலே ரூ.20.46 லட்சம் மோசடி; அழைப்பிதழ் அச்சடித்து பா.ஜ., குற்றச்சாட்டு
தடுப்பணை கட்டாமலே ரூ.20.46 லட்சம் மோசடி; அழைப்பிதழ் அச்சடித்து பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 15, 2024 12:52 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியன் கூத்தம்பாளையம் ஊராட்சியில், அவ-ரைக்கரை பள்ளத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், ஏழு லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டதாக, தகவல் அறியும் சட்டத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இடத்தில் தடுப்பணையே கட்டவில்லை. அதிகாரிகள், ஊராட்சி தலைவர், துணை தலைவர் கூட்டாக ஊழல் செய்துள்ளார் எனக்-கூறி பா.ஜ., கட்சியினர், ஊழல் செய்தவர்களுக்கு பாராட்டு விழா என்ற குறிப்பிட்டு, அழைப்பிதழ் அடித்து வினியோகம் செய்துள்-ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் பாராட்டு விழா அழைப்பிதழில் பா.ஜ.,வினர் கூறியிருப்பதாவது: அரசுக்கு வரி செலுத்தும் அப்பாவி மக்களே வணக்கம். நாம் பல வகையில் ஊராட்சிக்கும், அரசுக்கும் செலுத்திய வரிப் பணத்தில் சிறப்பாக பல ஆவணங்களை உருவாக்கி, பொய் கணக்குகள் எழுதி பணத்தைக் கையாடல் செய்யக் கூட்டு சதி செய்த திறமை-யான அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாராட்டு விழா.
நிகழும், குரோதி வருடம் ஆடி மாதம், 6ம் தேதி திங்கட்கிழமை, 22.7.2024 காலை, 9:௦௦ மணிக்கு மேல் திருவோண நட்சத்திரமும், கன்னிய லக்கினமும் கூடிய சுபயோக சுப தினத்தில், கூத்தம்பா-ளையம் அவரைக்கரை பள்ளத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில், கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணை பணிகளின் நிறைவு விழா மற்றும் தடுப்பணையில் பணியாற்றிய அரசு அலுவலர், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டு விழா நடக்கிறது. வரி செலுத்தி விட்டு ஏமாந்து நிற்கும் மக்கள் அனைவரும், விழாவில் தவறாது கலந்து கொள்ள அன்-புடன் அழைக்கிறோம்.
ஊழல் நடந்த இடம்: பாரத பிரதமரால் தத்தெடுக்கப்பட்ட கூத்-தம்பாளையம் ஊராட்சி அவரக்கரைப் பள்ளம்.
பணம் கையாடல் நடந்த திட்டம்: MGNREGS திட்டம் (மகாத்மா காந்தி பெயர் திட்டத்தில் கையாடல்)தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை: 12.46 லட்சம் + சுமார் 8 லட்சம் (100 நாள் வேலை); கையாடல் செய்த தொகை: 20.46 லட்சம். சிறப்பு திறமை: தடுப்பணை கட்டாமலே முழு பணத்தையும் கையாடல் செய்தது.
கட்டாத தடுப்பணைக்கு, அரசு ஆவணங்கள் தயாரித்து, திறமை மற்றும் மன தைரியத்தை பாராட்டி கீழ்காணுவோரை கவுரவிக்க உள்ளோம். வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சென்னி-மலை; கூத்தம்பாளையம் ஊராட்சி செயலர்; அரசு சிவில் பொறி-யாளர்கள்; மேற்பார்வையாளர்கள்; கூத்தம்பாளையம் ஊராட்சி தலைவி சுசிலா (அ.தி.மு.க.,); துணை தலைவர் நடராஜ் (தி.மு.க.,). மற்றும் ஊழலுக்கு ஒத்துழைத்த ஒன்றிய கவுன்சிலர் ராதிகா ராம-சாமி, மாவட்ட கவுன்சிலர் செல்வம், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார்; கம்பி, சிமெண்ட், ஜல்லி, மணலுக்கு பொய் பில் வழங்கிய நிறுவனங்கள்; கிராபிக் போட்டோ எடுத்த ஸ்டியோ மற்றும் பெயர் பலகை எடுத்தவர் மற்றும் பலர் பாராட்டப்படுகி-றார்கள்.
பாராட்டு விழா நடக்கும் இடம்: அவரைக்கரை பள்ளம் கூத்தம்-பாளையம் கிராமம். உங்கள் நல்வரவை விரும்பும், பாரதிய ஜனதா கட்சியுடன், சமூக ஆர்வலர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள். இவ்வாறு அழைப்பிதழில் தெரிவித்துள்ளனர்.