/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
21 குண்டு முழங்க போலீஸ்காரரின் உடல் தகனம்
/
21 குண்டு முழங்க போலீஸ்காரரின் உடல் தகனம்
ADDED : அக் 09, 2024 01:08 AM
21 குண்டு முழங்க போலீஸ்காரரின் உடல் தகனம்
பவானி, அக். 9-
அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலர் செல்வக்குமார், 32; ஊமாரெட்டியூரை சேர்ந்தவர். சின்னப்பள்ளம் செக்போஸ்ட்டில் தணிக்கை மேற்கொண்டபோது, குடிபோதையில் ஒரு வேன் டிரைவரிடம் பணம் கேட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை நேற்று நடந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதியம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட செல்வக்குமார் உடல், ஊமாரெட்டியூர் காவிரிக்கரை மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயமுருகன், செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் துப்பாக்கி குண்டுகள் முழங்க, மரியாதை செய்து எரியூட்டப்பட்டது.