/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 215 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 215 மனுக்கள் ஏற்பு
ADDED : மார் 05, 2024 01:43 AM
ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 215 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர்களிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டனர். தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற, 3 மாணவியருக்கு தலா, 15,000 ரூபாய் காசோலையை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜகோபால், ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

