/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்
/
குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்
ADDED : நவ 29, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பை கொட்டிய
22 பேருக்கு அபராதம்
ஈரோடு, நவ. 29-
மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் மூன்றாவது மண்டல பகுதிகளில், மழைநீர் வடிகால், நீர் நிலை மற்றும் பொது இடங்களில் குப்பை போடப்படுகிறதா? என்று, மாநகராட்சி நல அதிகாரி கார்த்திக்கேயன் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றனர்.
இதில் பொது இடங்களில் குப்பை போட்ட, 22 பேருக்கு ௫,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.