/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாண் குறைதீர் கூட்டத்தில் 22 மனு
/
வேளாண் குறைதீர் கூட்டத்தில் 22 மனு
ADDED : அக் 11, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ஆர்.டி.ஓ., சிந்துஜா தலைமை வகித்தார். ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை தாலுகா விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கை மனு அளித்தனர்.
துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். இதில் பட்டா கேட்டும், ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியும், நிலம் அளவீடு உள்பட, 22 விவசாயிகள் மனு அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.