/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுாறு நாள் திட்டத்தில் வேலை கோரி ஆர்ப்பாட்டம்
/
நுாறு நாள் திட்டத்தில் வேலை கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க ஒன்றிய தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். நுாறு நாள் வேலை திட்ட அட்டை வைத்துள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
வேலை வழங்க முடியாவிட்டால் இழப்பீடு வழங்க வேண்டும். நுாறு நாள் வேலைக்கான நிதியை மாற்றம் செய்து கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.