/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை
/
2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை
ADDED : அக் 11, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, : கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கடந்த மே, 26ம் தேதி முதல் செப்., 22ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில், இரண்டாம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு குறித்த ஆலோசனை கூட்டம், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்று நடந்தது. விவசாயிகள் தரப்பில் வரும், 24ல் நீர் திறக்க வலியுறுத்தினர்.