/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 12, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறைதீர் கூட்டத்தில்
225 மனுக்கள் ஏற்பு
ஈரோடு, நவ. 12-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. முதியோர் இல்லத்தில் சேர்க்கை, குடிநீர் வசதி, காவல் துறை நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஐந்து தற்காலிக துாய்மை பணியாளர் வாரிசுதாரர்களுக்கு, 20,500 ரூபாய் மதிப்பில் கல்வி, மகப்பேறு உதவித்தொகைக்கான ஆணை, சிவகிரியை சேர்ந்த முனீஸ்வரன், பஸ் விபத்தில் இறந்ததால், அவரது தாயாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.