/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
226 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
226 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே லட்சுமிநகர் செக்போஸட்டில், சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, இண்டிகோ காரை நிறுத்தி சோதனை செய்ததில், ஹான்ஸ், 11 மூட்டை, கூல்லிப் இரண்டு மூட்டை, விமல் பாக்கு, 13 மூட்டை இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக காளிங்கராயன்பாளையம், மூவேந்தர் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார், 25, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 226 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

