/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம்
/
மொபைல் பேசியபடி வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம்
ADDED : நவ 19, 2024 01:26 AM
மொபைல் பேசியபடி வாகனம்
ஓட்டிய 25 பேருக்கு அபராதம்
கோபி, நவ. 19-
கோபி போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., தண்டபாணி, எஸ்.எஸ்.ஐ., பிரபாகரன் அடங்கிய குழுவினர், கோபி சரவணா தியேட்டர் சாலையில், நேற்று காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே செல்போனில் பேசியபடி, வாகனம் ஓட்டி வந்த, 25 பேருக்கு, இ-சலான் கருவி மூலம் அபராதம் விதித்தனர்.
தங்கை மாயம்; சகோதரி புகார்
கோபி, நவ. 19-
கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுவாதி, 23; ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த, 15ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுவாதியின் சகோதரி ரேவதி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

